www.asiriyar.net

Thursday 7 September 2017

ஆசிரியர்களை நியமிக்க கோரிய மாணவர்கள் போராட்டம் வெற்றி

இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரி, இரண்டாம் நாளாக நேற்றும், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்ததால், பெற்றோரிடம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பேச்சு நடத்தினார்.


சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம்,கத்திரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

புறக்கணிப்பு : இங்கு துவக்கப்பள்ளியில், 66 பேர், நடுநிலைப் பள்ளியில், 37 பேர் என மொத்தம், 103மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில், மூன்று இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், ஒரு தற்காலிக இடைநிலை ஆசிரியர் மட்டுமே பணிபுரிகிறார்.
இரு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க கோரி நேற்று முன்தினம் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்தனர்.இரண்டாவது நாளான நேற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

பேச்சு : சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வளர்மதி நேற்று காலை பள்ளி சென்று,மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு நடத்தினார். மேட்டூர் அரசு நிதிபெறும் பள்ளியில் இருந்து, இரு இடைநிலை ஆசிரியர்கள் கத்திரிப்பட்டி பள்ளிக்கு நியமனம்செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வரும், 11ல் இருந்து பணிக்கு வருவர் என, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் சம்மதித்தனர்.

No comments:

Post a Comment