www.asiriyar.net

Friday 1 September 2017

ORIGINAL DRIVING LICENSE வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

 *வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமை வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்*


தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி கூறியுள்ளார். வாகனச் சட்ட பிரிவு 139-ன் படி ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமைத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் விளக்கத்தை கேட்பதற்காக, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.


No comments:

Post a Comment