www.asiriyar.net

Thursday 28 December 2017

நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 950 பேருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம்  1 கோடியே 45 லட்சம் ரூபாய் காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு முதல்முறையாக அரசின் கொள்கை முடிவாக இது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி அறிவியல், தொழிநுட்பம், கலை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்துகொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதன்முறையாக 100 மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்க உள்ளோம். ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, இங்கிலாந்து பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் செல்ல 4 குழுக்களை அனுப்ப உள்ளோம்.குறிப்பிட்ட பாடத்தையே மாணவர்கள் படிக்கும் நிலையில் மாற்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல் நிலை செல்லும் மாணவர்கள் ஒரே மாதிரி பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. மருத்துவம், பொறியியல்,விவசாயம், பல் மருத்துவம், கலை அறிவியல், இலக்கியம் போன்றவைகளைத்தான் படிக்கிறார்கள் அதை மாற்றும் வகையில் புதியபாடங்களை கற்க புதிதாக எட்டுக்கு நான்கு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம். தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்துபயிற்சி பெறுகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள்.நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். அந்த மாணவர்களுக்குமுன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.

பிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை.அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது.  நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment