www.asiriyar.net

Sunday 10 December 2017

மாணவர் வெளிநாடு பயணம் தேர்வு செய்ய குழு அமைப்பு

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லும், 100 மாணவர்களை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்த, 100 மாணவர்களை, வெளிநாடுகளுக்கு கல்விப்பயணம் அனுப்ப, தமிழக பள்ளிக்கல்வித்துறை, புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு, ஆண்டுக்கு, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில், தலா, 25 மாணவர்கள், தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களை தனித்தனி குழுக்களாக, பல்வேறு வெளிநாடுகளுக்கு, 10 நாட்கள் கல்வி சுற்றுலா அழைத்துசெல்ல, முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுடன், ஒவ்வொரு குழுவிலும், மூன்று ஆசிரியர்கள் செல்வர். மாணவியர் உள்ள குழுவில், ஒரு ஆசிரியை இடம் பெறுவார். பயணத்துக்கான மாணவர்களை தேர்வு செய்ய, தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில்,பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தக்குமார் உ்ஙபட, 10 பேர் அடங்கிய குழுவை அமைத்து,பள்ளிக்கல்வி முதன்மை செயலர்,பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment