www.asiriyar.net

Tuesday 5 December 2017

DIGITAL SR கணினி மயம் ஆவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்





🌟 ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது  வரவேற்கத்தக்கதே.
🌟 அதே வேளையில் ஏன் இந்த அவசரம்?
🌟 பல பணிப்பதிவேடுகளிலே முதல் பக்கத்தைத் தவிர வேறு பதிவுகள் இல்லை, பதிவுகளும் தவறாக உள்ளது.
🌟 பல ஆண்டு  தவறுகளை ஓரிரு நாளில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?எப்படிக் களைய முடியும்? Digital ஆக்குவதிலும் எண்ணிலடங்கா தவறுகள் .தலைவலி  போய் திருகுவலி வந்தது போல் உள்ளது.
🌟 Digital ஆக்கியதில் அவசர கதியில் சரி பார்த்து விடுபட்டவைகளைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.
🌟 இதுதான் Final எனச் சொல்ல நாம் Foreign ல் இல்லை.
🌟 எனவே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும்.
🌟 யாரோ செய்த தவறுக்கு ஊழியர் எப்படி இழக்க முடியும்.
🌟 மற்ற துறைகளை விட கல்வித்துறையில் மட்டும்ஏன் இந்த அவசரம்?
🌟 யாருக்கும் எள்ளளவும் பாதிப்பின்றி கணினிமயமாக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.,
🌟 தவறுகள் ஏற்படலாம் தவறில்லை அதை திருந்திக் கொள்ள மறுபடி மறுபடி வாய்ப்புகள் வழங்கவில்லை எனில் ஊழியருக்கு பெருத்த அடியே.
🌟 அதுவும் நம் நாட்டில் அவசர கதியில் எந்த ஒரு திட்டமானாலும் செயல்படுத்துவது வாய்ப்பு தராமலிருப்பது  வழக்கத்திற்கு மாறானது.
🌟 நாம்  நினைக்கலாம் நமக்கு விடுதல் இல்லை என ஆனால் நமக்கே தெரியாமல் தவறுகள் இருக்கலாம்.
🌟 எனவே ஓராண்டு வரை தவறுகள் திருத்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment