www.asiriyar.net

Monday 8 January 2018

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

அந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

1 comment: