www.asiriyar.net

Sunday 4 February 2018

கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

9இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment