www.asiriyar.net

Wednesday 7 March 2018

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவகல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரத்தை, இந்தியமருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., ரத்து செய்தது.


  இதுகுறித்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், '2016 -17 கல்வியாண்டில், தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரியில், இடமளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தனியார் கல்லுாரியைச் சேர்ந்த, 144 மாணவர்களுக்கும்சிறப்பு கவுன்சிலிங், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், நேற்று நடந்தது. இதில், அனைத்து மாணவர்களும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில், சென்னை, ஸ்டான்லி மற்றும் புதுக்கோட்டை மருத்துவ கல்லுாரிகளை தவிர, பிற மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் இடங்களை அதிகரித்து கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதன்படி, 144 மாணவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment