www.asiriyar.net

Wednesday 14 March 2018

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

 பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த 7ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்தது. அன்றைய தினம் மொழி பாட தேர்வுகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 27,994 மையங்களில் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொது தேர்வை எழுதினர். அதில், 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.

இதேபோல், இன்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதிலேயே முணைப்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 படிப்பை பொது தேர்வாக நடத்த முடிவு செய்தது அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளது. 

No comments:

Post a Comment