www.asiriyar.net

Saturday 3 March 2018

BSNL-க்கு மாறுமா கல்வித்துறை?

கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல்அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.கல்வித்துறை செயலாளரின் கீழ் பள்ளி கல்வி, தொடக் கல்வி,
மெட்ரிக்,ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட, உதவி தொடக்க, கூடுதல் தொடக்ககல்வி அலுவலர்கள், அரசு மேல், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்என 6 ஆயிரம் ஏர்செல் அலைபேசி இணைப்புகள் சி.யு.ஜி., முறையில்நான்கு ஆண்டுகளாக உள்ளன.ஏர்செல் இணைப்புகள் செயலிழந்துள்ளநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தகவல் பரிமாற்றத்தில்அதிகாரிகள், தலைமையாசிரியரிடையே சிரமம் ஏற்பட்டுள்ளது.அலைபேசி இணைப்புக்களை மற்றொரு தனியார் இணைப்புக்குமாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தனியார் அலைபேசிநிறுவனங்கள் அதிகாரிகளிடம் பேசி வருகின்றன. அரசு பள்ளிதலைமையாசிரியர்கள் பி.எஸ்.என்.எல்., இணைப்பிற்கு மாற்றபோர்க்கொடி துாக்கியுள்ளனர்.

உயர்நிலை மேல்நிலை பள்ளிதலைமையாசிரியர் கழக மாவட்ட செயலர் பாஸ்கரன், "மீண்டும்தனியார் நிறுவனங்களை நம்பி இணைப்பு பெற்று பிரச்னையைசந்திப்பதை விட, பி.எஸ்.என்.எல்.,க்கு மாறினால் அரசுக்கும்வருவாய் கிடைக்கும்," என்றார்.

No comments:

Post a Comment