www.asiriyar.net

Wednesday 30 August 2017

ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.


ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்தது. முதலில், ஆதார் தொடர்பான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கிய பின்னர் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், “பல்வேறு சமூக நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது.

ஏற்கெனவே, ஆதார் தொடர்பான வழக்கில் அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment