www.asiriyar.net

Friday 1 September 2017

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்!!

ஆசிரியர்கள்,செப்7 முதல்,தொடர் வேலை நிறுத்தம்செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமாஎன, மாணவர்கள்குழப்பமடைந்து உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள்மற்றும் அரசு ஊழியர்சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ'கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

இந்த அமைப்பின் சார்பில்,தொடர் போராட்டங்கள்அறிவிக்கப்பட்டு உள்ளன.பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்வது;பழைய, 'பென்ஷன்' திட்டத்தை அனைவருக்கும்அமல்படுத்துவது; ஏழாவது  ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாதஊதியத்தை உயர்த்துவதுஎன, பல கோரிக்கைகள்முன்வைக்கப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, மாவட்டதலைநகரங்களில்ஆர்ப்பாட்டம், கோட்டைநோக்கி பேரணி மற்றும்வேலை நிறுத்தம் ஆகியபோராட்டங்கள் நடந்தன.ஆனாலும், அரசு பேச்சுநடத்தாததால், வரும், ௭முதல், காலவரையற்றவேலை நிறுத்தம்அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், அரசு பள்ளிஆசிரியர்களில்,பெரும்பாலானோர்பள்ளிக்கு வரவாய்ப்பில்லை என்பதால்,பள்ளிகள்திறந்திருந்தாலும்,வகுப்புகள் நடக்காது.

இந்நிலையில், வரும், 11முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1மற்றும் பிளஸ் 2வுக்கு, காலாண்டு தேர்வு நடக்கும்என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கு நான்குநாட்களுக்கு முன்,ஆசிரியர்கள் போராட்டம்துவங்கு வதால்,தேர்வுக்கான பாடங்களைமுழுமையாக நடத்தி முடிக்கமுடியாத நிலை உள்ளது.போராட்டம் 11ம் தேதிக்குபின்னும் நீடித்தால்,காலாண்டு தேர்வைதிட்டமிட்டபடி நடத்த முடியாதசூழல் ஏற்படும். எனவே,தேர்வு திட்டமிட்டபடிநடக்குமா என, மாணவர்கள்குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment