www.asiriyar.net

Wednesday 6 September 2017

தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனித வளத் துறை சார்பில், ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி முடிக்கும் வரை, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப் பங்களை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள், ஆன் -- லைனில் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில், தேசிய திறனாய்வு தேர்வு, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். செப்டம்பர், 13 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் விபரங்களை, பள்ளி ஆவணங்களோடு ஒப்பிட்டு, பிழையின்றி பதிவு செய்வது அவசியம். மாணவர்களின் முகவரி மற்றும் பெற்றோரின், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிடுவது அவசியம். ஒரு மாணவருக்கு, 50 ரூபாய் வீதம் தேர்வுக்கட்டணம் வசூலித்து, செப்டம்பர், 18க்குள், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வு, தமிழகம் முழுவதும் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

1 comment: