www.asiriyar.net

Monday 11 September 2017

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளைமுடிவு: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஜாக்டோ - ஜியோவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு செய்யப்படும் என தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜெ.கணேசனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட அமைப்பு அறிவித்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் சென்னையில் நேற்று கூறியதாவது:தலைமைச் செயலக சங்கத்தின் செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (இன்று) நடக்கிறது. அதில், ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

புதிய ஊதியம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை இம்மாத இறுதிக்குள் கிடைத்துவிடும்; அதன்பேரில் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதன் பேரில் தான் போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம். ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம் 12-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெறும். அதில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment