www.asiriyar.net

Sunday 10 September 2017

காலாண்டு தேர்வு மாற்றம்.

காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடக்கிறது. 23ம் தேதி, தேர்வு முடிகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால், தேர்வு வாரியம், 23ம் தேதி கலந்தாய்வு
நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, 22ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.

2 comments:

  1. பழைய பாடநூலும் புதிய வினாத்தாள் குளறுபடிகளும்

    -----------------------------------------------------------------------------------------------------

    தமிழகக் கல்வித்துறையின் சீர்திருத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு முதல் மாநிலப் பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது,

    மொத்த மதிப்பெண்கள் ஆயிரத்து இருநூறிலிருந்து அறுநூறாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு நேரமும் மூன்று மணியிலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

    நோக்கம் பாராட்டத்தக்கதுதான். ஆனால், அதைச் செயல்படுத்தும் அவசரத்தில் எத்தகைய எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்து உடனே திருத்தினால் உண்மையான மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும்.

    பதினோராம் வகுப்பிற்குப் பெரும்பான்மையான பாடங்களுக்கு புதிய மாற்றங்களோடு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கின்றன.

    மொத்த மதிப்பெண்கள் குறைக்கப்படவேண்டும் என்பதற்காக முதலில் செய்யப்பட்ட மாற்றம் அதிக மதிப்பெண் வினாக்களின் மதிப்பெண்களைக் குறைத்ததுதான். ஆனால், அவ்வினாக்களுக்கு எழுத வேண்டிய விடைகளின் அளவில் பெரும்பாலும் மாற்றம் இல்லை. இது எவ்வளவு சோர்வை மாணவர்களுக்குத் தரும் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

    குறைந்த மதிப்பெண்ணுக்குரிய வினா வகைகள் தற்போதைய பாடங்களில் இல்லாத போதும் அவ்வகை வினாக்கள் அதிகமாகப் புதிய வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளன. இதனால், அதிக மதிப்பெண் விடைகளையே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கும் மாணவர்கள் எழுத வேண்டியிருக்கும் அல்லது நூல் முழுமையும் படித்து அவ்வகை வினாக்களையும் விடைகளையும் கண்டறிய வேண்டியிருக்கும். இதுவும், மாணவர்களுக்குச் சிரமத்தைத் தரும்.

    சில வினாக்களை வகைமைப் படுத்தியதிலும் பொருத்தமின்மை தெரிகிறது. சிலவகை வினாக்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கு மாறாக, அவற்றுக்கான விடைகள் எழுதவேண்டிய நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.

    மொத்த மதிப்பெண்கள் அறுநூறாகக் குறைக்கப்படுவதாக சொன்னபோது, மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை இணைத்து ஒரு தாளாக மாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அமையாதது ஏமாற்றம். அதிலும், ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்குத் தமிழ்ப் பாட மாதிரி வினாத்தாள்கள் அச்சமூட்டுகின்றன.

    புதிய பாடநூல்கள் அறிமுகம் செய்கிறபோது அதற்கேற்ப மாற்றப்பட்ட வினாவகைகளை, மதிப்பெண் முறைகளைச் சேர்த்து அறிவித்திருக்கலாம்

    பதினோராம் வகுப்பிற்கான பாடநூலில், ஏற்கனவே பாடங்கள் எழுதப்பட்டு, அந்தப் பாடங்களுக்கு ஏற்ப பொருத்தமான மதிப்பெண்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட வினாக்கள் இருந்த நிலையில்,. இப்போது அந்தப் பாடநூலை மாற்றாமல், திடீரென, பொருத்தமில்லாமல் மதிப்பெண் முறைகள், வினாவகைகளை , மாற்றி அறிவித்திருப்பது பெரும் குழப்பத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது காலணிக்கேற்ப காலை வெட்டும் கதையாகத் தெரிகிறது..

    ஏற்கனவே, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு அடுத்து இரண்டு ஆண்டுகள் மேல்நிலை வகுப்பிலும் பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் உள்ள மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் அமைப்பு நிச்சயம் திகைப்பையும் சோர்வையுமே தரும்.

    உடனடியாக, கல்வித்துறை விழித்துக்கொண்டு புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட வினாத்தாள் அமைப்பில் உள்ள குறைகளை பல்துறையினரிடமிருந்தும் கேட்டறிந்து, குறைகளைக் களைவது மாணவர்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

    ReplyDelete