www.asiriyar.net

Saturday 30 September 2017

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மருத்துவ மாணவி சுகன்யா!

ஒவ்வொருவரும், ஏதோ ஒரு கனவுடன்தான் படிக்கத் தொடங்குகிறார்கள். கனவு நிறைவேறப் போராடவும் செய்கிறார்கள்.  நீட் தேர்வில் பாஸாக முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்றால், டாக்டர் கனவுடன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுவந்த சுகன்யா, கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 




கோவையைச் சேர்ந்தவர், பாஸ்கர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவரின் மகள் சுகன்யாவுக்கு மருத்துவராக வேண்டுமென்பதே கனவு. தன்னிடமிருந்த 20 ஏக்கர் நிலத்தையும் விற்று, மகளின் கனவை நிறைவேற்ற தந்தை பாஸ்கர்  முடிவுசெய்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மகளைச் சேர்த்தார். பாஸ்கர் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைத்தது. விபத்து ஒன்றில் சிக்கிய பாஸ்கரன்  உயிரிழக்க, சுகன்யாவின் மருத்துவக் கனவு பாழாகிப்போனது. தந்தை இறந்த பின், சுகன்யாவின் மருத்துவராகும் கனவு கரையத் தொடங்கியது. 

ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே மருத்துவம் படித்த சுகன்யா, கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், இப்போது  கல்லூரிக்கு போகாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார். கல்லூரி நிர்வாகமும் அவருக்கு  உதவ முன்வரவில்லை. சுகன்யா குடும்பத்துக்கு வேறு சொத்து இல்லாத காரணத்தினால், வங்கிகளும் லோன் அளிக்க மறுக்கின்றன. இன்னும் இரண்டரை வருடங்கள் படிக்க அவருக்கு சுமார் ரூ. 20 லட்சம் தேவைப்படுகிறது. உதவும் உள்ளம்கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அவர்.

சுகன்யாவின் தாயார், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கிறார். சுகன்யாவின் தாத்தா சின்னயா, 75 வயதில் ஏ.டி.எம் பாதுகாவலராகப் பணிபுரிந்து ரூ.6 ஆயிரம் சம்பாதிக்கிறார். இதுதான் சுகன்யா குடும்பத்தின் மாத வருமானம்.

No comments:

Post a Comment