www.asiriyar.net

Tuesday 26 September 2017

தொலைந்து போன சான்றிதழ்களின் நகல்களை போலீசார் சான்று இல்லாமல் பெறும் நடைமுறை இன்று முதல் அமல்: அமைச்சர் தகவல்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழால் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி: 

ஆன்லைன் கவுன்சலிங் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? அடுத்த ஆண்டு ஆன்லைன் கவுன்சலிங் வரும் என்று தெரிவித்தோம். இன்று ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. கவுன்சலிங் பணி தனியாரிடம் வழங்கப்படுமா என்பது குறித்து பிறகுதான் தெரிவிக்கப்படும்.

அடுத்த ஆண்டு நீட் தேர்வு பொறியியல் படிப்புக்கு வருமா?மத்திய அரசு பொறியியலுக்கும் நீட் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதையும் மீறி ஆர்வம் காட்டினால் அது குறித்து ஆய்வு செய்வோம். மேலும் அனைத்து மாநிலத்திலும் நீட் தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் தமிழகத்தில் மருத்துவம், ெபாறியியல் உள்ளிட்ட எல்லா நிலையிலும் நீட் தேவையில்லை என்கிறோம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்கிறோம் அதனால் நீட் தேவையில்லை என்று எதிர்த்து வருகிறோம்.  பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவப் படிப்புக்கு சென்றுள்ளனர்? 302 மாணவர்கள் பொறியியல் படிப்பு வேண்டாம் என்று மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளனர்.  உயர் கல்வித்துறையில் புதிய திட்டம் கொண்டு வரும் எண்ணம் உள்ளதா? அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு புதியதாக 8 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலை உறுப்பு கல்லூரிகள் 3 தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப  961 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.  

அதேபோல இந்த ஆண்டு புதியதாக 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. உறுப்பு  கல்லூரிகள் 89 தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சான்றுகளை தொலைத்துவிட்டாலோ, திருடு போய்விட்டாலோ அவர்கள் போலீசில் புகார் செய்து அங்கிருந்து சான்று வாங்கிவந்து எங்களிடம் விண்ணப்பித்து அதன் மீது பரிசீலனை செய்து நகல் வழங்குவதற்கு கால் தாமதம் ஆகிறது. அதனால், இனி வரும் காலங்களில் போலீசார் சான்று தேவையில்லை. மாணவர்கள் தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இணைத்து விண்ணப்பித்தால் இரண்டு நாட்களில் மாணவர்கள் தொலைத்த சான்றின் நகல் வழங்கப்படும். நாளை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அதேபோல, பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தமிழக பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பல்கலைக் கழக எல்லையை விட்டு அடுத்த பல்கலைக் கழகத்திலோ, அல்லது அதன் எல்லைக்குட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டுமானால் இனிமேல் இடப்பெயர்வு(மைக்ரேஷன்) சான்று இணைக்க வேண்டாம். இது தமிழகத்துக்கு மட்டும் பொருந்தும். பொறியியல் படித்து ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்களுக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படுமா?

 பொறியியல் பட்டப்படிப்பு 4 ஆண்டில் முடிக்க வேண்டும். ஆனால் ஒருசிலர் முடிப்பதில்லை. 10 ஆண்டு வரை கால நீட்டிப்பு கொடுத்தால் என்ன ஆகும். அதனால் தான் அடுத்த 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். அதாவது 7 ஆண்டில் முடிக்க வேண்டும். இப்போது மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து வாய்ப்பு கொடுக்கலாம் என்று இன்று  நடக்கும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.  துணை வேந்தர் நியமனம் எப்போது முடியும்?  துணை வேந்தர் நியமனம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் சட்டப் பேரவையை தள்ளி வைத்துள்ளோம். அதனால் 4 மாதத்தில் பணி முடியும்.

No comments:

Post a Comment