www.asiriyar.net

Wednesday 6 September 2017

CPS : முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்

''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை (செப்., 7) துவங்குகிறது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ குழுவினருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வரிடம் பேசித்தான் உறுதியளிக்க இயலும்' என தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து சாதகமான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.'இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, அதன்பிறகு ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சம்பளக்குழு அறிக்கை தாமதமாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் அறிவிப்பு இல்லை. எனவே, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்குகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கின்றனர், என்றார்.

1 comment: