www.asiriyar.net

Tuesday 17 October 2017

ரூ.11000 இல் INTERACTIVE SMART BOARD - கற்பித்தலில் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்

கற்பித்தலில்  அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் பல  புதுமை  படைத்தது  வருகிறார்கள். தனியார்  பள்ளிகளுக்கு  கிடைக்காத பல புதுமையான தொழில்நுட்பங்களை  அரசுப்பள்ளியில் பயன்படுத்தப்படுகிறது. இதன்  மற்றொரு மயில் கல்லாக  வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், சிந்தகாமணிபெண்டா அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரிஆசிரியர் A.அருண்குமார்  அவர்களின் முயற்சியினால் குறைந்த செலவில் ரூ.11000   இல் INTERACTIVE  SMART BOARD வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்கள் அதிநவீன தொழில்நுட்பம், தொடுதிரை மூலம் அவர்களே தொட்டு, வரைந்து கற்றல் கற்பித்தலை  மேற்கொள்கிறார்கள்.

குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த INTERACTIVE SMART BOARD தொழில்நுட்பத்தினை பிற அரசுப் பள்ளிகள்  உருவாக்க நினைத்தால்
தொழில்நுட்ப உதவிகளை அளிக்க  தயாராக  உள்ளதாக இதனை உருவாக்கிய ஆசிரியர் .திரு.அருண்குமார் கூறியுள்ளார்.

இத்தொழிநுட்பத்தின் மூலம் அனைத்து பாடங்களையும் கற்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும் 

தேவைப்படுவோர் அவரது அலைபேசி 9786884566 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 

INTERACTIVE  SMART BOARD மூலம் மாணவர் கற்றல்  கற்பித்தல் செயல்பாடுகளை அறிய சில விடீயோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment