www.asiriyar.net

Wednesday 1 November 2017

ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மே மாதம் கோடை விடுமுறையின்போது, பொது கவுன்சிலிங் முறையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. 

மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர். இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர். அதை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர்,
பிரதீப் யாதவ் ஏற்று, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

அதன்படி, 'நிர்வாக மாறுதல்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.'கடுமையான புகார்கள்,ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக காரணங்களால், மாறுதல் வழங்கலாம். நிர்வாக மாறுதல்களை பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை காலங்களில் மட்டும், வழங்க வேண்டும். 

மற்ற நேரங்களில் மாற்றினால், மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கும். இதை, அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment