www.asiriyar.net

Sunday 12 November 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விபரம் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது; பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நவ., 23 - 25 வரை நடக்க உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை, உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அவர்களையும் அழைத்து, பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment