www.asiriyar.net

Sunday 26 November 2017

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும் - ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு உள்ளதா?


ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .

அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை. 

மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?


✍மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.

✍அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.

✍ தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும்  தண்டனையா?

✍இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍ ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க  பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா .  

✍தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.

சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .

✍என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.

 படிக்காத வீட்டுபாடம் எழுதாத மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழுத்துவார சொன்னது ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு குற்றமா?
 
அப்படி எனில் யாருக்கு சொல்வது AEEO DEO CEO கா?

மற்ற துறைகளில் அவர்கள் வேலை செய்யாத்தற்கோ இலஞ்சம் பெற்றதற்கோ கையாடல் செய்ததற்கோ பணி நீக்கம் ,கைது செய்திருப்பதை பார்த்திருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள். மாணவர்கள் படிக்காத்தற்கும் படிக்க வைக்க முயற்சி செய்வதற்க்கும் கைது செய்யும் அவலம் உண்டா?

  இன்றைய சமுதாய சூழல் தெரிந்தும் நம் அதிகாரிகளின் அதிகாரகம் கொடிகட்டி பறக்கிறது.

 தமிழ் நாட்டில் வேறு எந்த துறையிலாவது நன்றாக உழைத்ததற்கு கைது செய்யமுடியுமா?

   இதற்கெல்லாம் அரசு தான் காரணம் என்று சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது.

   இத்தனைமுறை இத்தனை முறை கைது நடந்ததே ஒரே ஒருமுறையாவது எதிர்ப்பை தெரிவித்தோமா?

  மாநில அளவில் ஒரு சங்கமாவது போராட்டத்தை அறிவித்ததா. சம்பளம் வாங்குகிறோம் என்பதற்காக சுயமரியாதையையும் இழந்தே உயிர் வாழ வேண்டுமா?

போராடுங்கள் அல்லது சங்கங்களை கலைத்துவிடுங்கள்.
   
உங்களுக்கு தெரியுமா தினம் ஒரு அறிவிப்பு வரும் ஒரேதுறை கல்விதுறை என்று.
    ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லை பாடம் நடத்தவில்லை என்றால் எந்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

   பையன் படிக்கவில்லை என்றால் பையனை கேட்கவேண்டும் எங்களை கேட்டால் நாங்கள் பள்ளியில் படுத்து கொண்டு தூங்கியா வருகிறோம்.

எத்தனை எத்தனை வேலைகள் எத்தனை பதிவேடுகள் உயிரை கொடுத்து எத்தனை ஆசிரியர்கள் உழைக்கிறார்கள் நன்றி வேண்டாம்.மதிக்காமல் கூட போங்கள் மிதிக்காமலவது விடுங்கள் படிக்க விரும்பும் குழந்
தைகளாவது படிக்கட்டும்.

No comments:

Post a Comment