www.asiriyar.net

Saturday 9 December 2017

08.12.2017 நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை  மதுரைஅரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. 


 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரியநிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்


2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசுஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிகபணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யஅனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 21 - 12-17 அன்றுமுறையீடு செய்வது


3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்றதலைப்பில்  கருத்தரங்கம் திருச்சியில் 31.12.17. அன்று  ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.


4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான  

1)புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல்  பழைய ஓய்வூதியத்தைஅமுல்படுத்தல்


 2) 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்


3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறைஊதியம் வழங்க வேண்டும்


 4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியமுரண்பாடுகளை களைதல்

 6)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல்,

7) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்துதல்,

8) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைரத்து செய்தல், 

9) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்டநிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லைஎன்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர்மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment