www.asiriyar.net

Sunday 3 December 2017

ஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்!!

கல்வி தரம் உயர வேண்டுமானால்...............

1.மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

2.பள்ளியில் பராமரிக்கப்படுகின்ற தேவையில்லாத records நீக்கப்பட வேண்டும்

3.பணியிடை பயிற்சி ( crc, brc பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால்) நீக்கப்பட வேண்டும்.

4.வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.


5.கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.(தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இனைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)

6.ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

7.அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.

8.எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.

9.பயிர் நன்றாக வளர களையை நீக்குவது போல, பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

10 .ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.

11.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.

12.இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது(Aeeo,ssa)

13.பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,
அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

14.அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய, அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.

இன்னும்...இன்னும் ...ஆயிரம் ஏக்கங்கள் உள்ளன.

குறைந்த பட்சம் மேலே உள்ளதை அரசு செய்து பார்க்கட்டும்.

பிறகுபார்
 எமது இனத்தின் .அர்பணிப்பை.
கற்பித்தல் திறனை,
கலையார்வத்தை,
படைப்பாற்றலை,

No comments:

Post a Comment