www.asiriyar.net

Saturday 2 December 2017

DATALLY - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அசத்தல் App

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் கூகுள், டேட்டாலி (Datally) என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓஎஸ்களைத் தயாரித்தது வெளியிட்டுப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக நம்பகத்தன்மை கொண்ட அப்ளிகேஷன்களையும் அவ்வப்போது வெளியிட்டுப் பயனர்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்க்கிறது.

இந்த முறை டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டினை கண்காணித்து அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் தினந்தோறும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் எந்த அளவிற்கு டேட்டாவை (இணையப் பயன்பாட்டின் அளவு) பயன்படுத்திவருகின்றனர் என்பதைக் கண்டறிய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.

அதுமட்டுமின்றி பின்புறத்தில் செயல்படும் அப்ளிகேஷன்களைக் கண்டறிந்து அதனைத் தடை செய்யவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் பயனர்கள் பயன்படுத்தும் டேட்டா தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. 

எந்த அப்ளிகேஷன் அதிக டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிய டேட்டாலியில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிகம் டேட்டா பயன்படுத்தும் அப்ளிகேஷனிடமிருந்து டேட்டா அளவினைக் குறைக்க இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பயனர்கள் எந்த அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் இதற்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டேட்டா சேவிங்ஸ் என்ற ஒன்றினை இதில் புதிதாக கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது. அதேபோல் அருகில் இருக்கும் வைஃபைகளைக் கண்டறியும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் குறித்த வீடியோ பதிவினையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

https://m.youtube.com/watch?v=UAdJvXMIlXc&feature=youtu.be

No comments:

Post a Comment