www.asiriyar.net

Sunday 7 January 2018

ஆசிரியர் கவுன்சிலிங் குழப்பம் தவிர்க்க ஆன்லைனில் காலி பணியிட விபரம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் குழப்பத்தை தவிர்க்க, காலியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் களுக்கு, மாநில அளவிலான கலந்தாய்வும், தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களுக்கு, மாவட்ட அளவிலான கலந்தாய்வும் நடக்கிறது.

கடந்த ஆண்டு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, ஆன்லைன் கலந்தாய்வில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. பல இடங்கள் மறைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.இதை போக்கும் வகையில், தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்...பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் விபரங்கள் மற்றும் காலி பணியிட விபரங்களை, www.tndse.com என்ற இணையதளத்தில், அனைத்து தலைமை ஆசிரியர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ள, 'யூசர் நேம், பாஸ்வேர்டு' மூலம், 9க்குள் பதிவு செய்யவும். இதை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

ஏற்கனவே, ஆசிரியர்கள் விபரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் பதிவேற்றம் செய்ய சொல்வதால், வேலைப்பளு தான் அதிகரிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ளவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களின் விபரங்களை, தற்போது சேகரித்து வருவதால், உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. But Hyundai seems to have hit the nail on its head withthe 2018 Ioniq which is now in its second year of production and is one of the closest rivals of the Prius.The Ioniq has earned distinction for being the most fuel-efficient non-plug in hybrid in the market.

    ReplyDelete