www.asiriyar.net

Thursday 1 March 2018

மாணவர்களுக்கு '104'ல் மனநல ஆலோசனை

தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, '104' மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சேவை மைய அலுவலர் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, உளவியல் நிபுணர்கள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பணியாற்றுவர்.

மாணவர்கள், 24 மணி நேரமும், ஆலோசனைகள் பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை,ஆலோசனைகள் வழங்கப்படும். பெற்றோருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி கல்வித்துறையின் சார்பில், 14417 என்ற எண்ணிலும், இலவச உளவியல் ஆலோசனைகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், பொது தேர்வில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தேர்வின் நடைமுறை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க, குறைதீர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான, தொலைபேசி எண்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது, கூடுதலாக நான்கு தொலைபேசி எண்களை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று அறிவித்தார். பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் தங்கள் குறைகளை, 93854 94105, 93854 94115, 93854 94120 மற்றும், 93854 94125 ஆகிய, தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம் என, கூறியுள்ளார்.

No comments:

Post a Comment